இரவுநேர ஊரடங்கால் விவசாயிகள் அவதி: விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை அனுமதிக்க கோரிக்கை

ஜெயங்கொண்டம்: இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விளைபொருட்களை விவசாயிகள் வாடகை வாகனங்களில் கொண்டு வருகின்றனர். தற்போது இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சாகுபடி செய்த எள், கடலை போன்றவற்றை கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஒரே நேரத்தில் வாகனங்கள் அணி வகுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் கொள்முதல் செய்த விளைபொருட்களை வியாபாரிகள் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றி செல்ல முடியவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இரவு முழுவதும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காத்திருக்கும் நிலை இருப்பதால் தங்களது வாகனங்களை தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: