தாடிக்கொம்பு புதிய தார் ரோட்டில் ஒரு வாரத்திலே ஓட்டை... விபத்தில் சிக்கும் வாகனஓட்டிகள்

திண்டுக்கல்: தாடிக்கொம்புவில் போடப்பட்ட புதிய தார் சாலையில் ஒரு வாரத்திலே மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளத திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்டது பாரதி நகர், அம்மன் நகர், முத்து நகர், எம்கே நகர். இப்பகுதிகளுக்கு செல்லும் சாலை கடந்த 2 வாரங்களுக்கு புதிதாக போடப்பட்டது. இப்பகுதி மாணவ, மாணவிகள், பஞ்சாலை தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். ஜல்லி கற்கள் கொட்டியதோடு கிடப்பில் கிடந்த இச்சாலை பணி தினகரன் செய்தி எதிரொலியாலும்,  சட்டமன்ற தேர்தலையொட்டியும் அவசர, அவசரமாக போட்டு முடிக்கப்பட்டது.

அப்போது ஜல்லி கற்களை போட்டு ரோடு ரோலரை ஏற்றி இறக்கியதில் இச்சாலையில் உள்ள ஓடு பாலம் சேதமடைந்தது. பின்னர் அதனை சரிசெய்யாமல் மறைப்பதற்காக கற்களை மட்டும் போட்டு விட்டு அதன்மேலே சாலையை போட்டு விட்டனர். தற்போது அது பெரும் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இரவுநேரங்களில் டூவீலரில் வருவோர் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாதசாரிகளும் பள்ளம் தெரியாமல் விழுந்து விருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடு பாலத்தை சரிசெய்து முறையாக சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>