வங்கதேசம் ரன் குவிப்பு

இலங்கை-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கண்டியில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் வங்கதேசம் 90 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்திருந்தது. நஜ்மல் 126*, மோமினுல் 64* ரன்னுடன் களத்தில் இருந்தனர். முன்னதாக தமிம் 90 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இந்நிலையில் 2வது நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்த  நஜ்மல் 163 ரன்னுக்கும், மோமினுல்  127 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து மழை பெய்ததாலும், வெளிச்சமின்மை காரணமாகவும் இடைஇடையே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது வங்கதேசம் 155 ஓவரில்  4 விக்கெட் இழப்புக்கு 474 ரன் குவித்திருந்தது. அதன் பிறகும் நிலைமை மாறததால் 2வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. முஷ்பிகுர் 43*, லிட்டன் 25* ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் விஸ்வா பெர்னாண்டோ 2, லக்மல், தனஞ்ஜெயா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Related Stories:

>