200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஜெய்வாபாய் பள்ளியில் மறு நடவு

திருப்பூர்: திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. சாலை விரிவாக்கம் மற்றும் அந்த  பழமையான மரத்தின் வேர்கள் வீடுகளுக்குள் செல்வதால் தன்னார்வலர்கள் உதவியோடு அந்த மரத்தை மறுநடவு செய்ய முடிவு செய்தனர்.  

இந்நிலையில் நேற்று கிரேன், மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு அந்த பழமையான ஆலமரத்தை வேரோடு பிடுங்கி அருகாமையில் உள்ள  ஜெய்வாபாய் பள்ளியில் மறுநடவு செய்தனர். மறுநடவு செய்யப்பட்ட ஆலமரத்தை பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் ஆர்வத்துடன்  பார்வையிட்டனர்.

Related Stories: