தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு 100% பலன்: கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவு வெளியீடு.!!!

டெல்லி: தீவிர கொரேனாா நோயாளிகளுக்கு கோவோக்சின் தடுப்பூசி 100% பலன் அளிப்பதாக பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும், வரும் மே1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது.  ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  

இதில், கோவாக்சின் தடுப்பூசி தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு 100% பலன் அளிப்பதாக இடைக்கால அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 78% அளிப்பதாகவும் பரிசோதனையின் முடிவு தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கோவோக்சின்  தடுப்பூசியின் முதல் மற்றும் 2வது டோஸை போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: