கருப்பு எள் கிலோ ரூ.8 உயர்ந்து ஏலம்-விவசாயிகள் மகிழ்ச்சி

க.பரமத்தி : ஒரே வாரத்தில் கருப்பு எள் ஒரு கிலோ ரூ.8 உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் மானாவாரியாக எள், கம்பு, சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

அங்கு 373 மூட்டைகளில் 27,691 எடைக்கு நடந்த ஏலத்தில் சிகப்பு எள் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.103, அதிக விலையாக கிலோ ரூ.112க்கு ஏலம் போனது.  கடந்த வாரத்தை விட தற்போது கிலோவுக்கு ரூ.3 உயர்ந்து ஏலம் போனது. இதே போல கருப்பு எள் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.97, அதிக விலையாக கிலோ ரூ.114க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தைவிட தற்போது கிலோவுக்கு ரூ.8 உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>