மே 2 நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியிட திட்டமிட்டு வருகிறோம் : தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்

சென்னை : திட்டமிடப்பட்ட மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.

அதிகாரி, ஏஜெண்டுகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யலாமா வேண்டாமா என்பது பற்றி ஆலோசனை நடக்கவுள்ளது. கொரனோ பரிசோதனை செய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதா என சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.இதனிடையே நிரூபர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்றும் நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறினார். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் 7 அல்லது 10 மேஜைகள் அமைப்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் உள்ள பாதுகாப்பு; ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அறிக்கையை வாங்கி உள்ளதாகவும் சாகு குறிப்பிட்டார்.

Related Stories:

>