கம்பம் பகுதியில் களைகட்டும் புளியம்பழம் சீசன்-நல்ல விலை கிடைப்பதால் தோப்பு உரிமையாளர்கள் மகிழ்ச்சி

கம்பம் : கம்பம் பகுதியில் புளியம்பழம் சீசன் தொடங்கியதை அடுத்து, புளிய மரங்களில் பழம் உதிர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கம்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் புளியமரங்களில் புளியம்பழம் அடிக்கும் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. பொதுவாக ஜனவரியில் புளியமரங்கள் பிஞ்சு விட்டு காய்காய்க்கும், அதை தொடர்ந்து மார்ச், ஏப்ரலில் புளியம்பழம் சீசன் தொடங்கும்.

இந்நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கம்பம், கூடலூர், லோயர்கேம்ப், உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் பகுதிகளில் உள்ள புளியமரங்களில் பழம் உதிர்க்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இப்பணியில் ஈடுபடும் ஆண்களுக்கு ஒரு நாள் கூலியாக ரூ.500 முதல் 700 ருபாய் வரையிலும் பெண்களுக்கு 300 ருபாயும் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. புளியம்பழத்தை தோலுடன் கிலோ ரூ.50க்கும் மொத்த விலையில் விற்பனை செய்யபடுவதாக புளியந்தோட்ட உரிமையாளர் கூறுகின்றார். மேலும் அவர்கள் கூறுகையில் இந்த வருடம் புளியம்பழ சீசன் பரவாயில்லை. மொத்த விலைக்கு ரூ.50க்கு விற்பனையாகிறது. அடுத்த வாரத்திற்குள் சீசன் ஓய்ந்து விடும்’ என்றார்.

Related Stories: