காரியாபட்டி பகுதிகளில் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை-சுவரொட்டி மூலம் கண்டித்த விசிக..

காரியாபட்டி : காரியாபட்டி பகுதிகளில் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதை கண்டித்து விசி கட்சியினர் அப்பகுதிகளில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், கே.செவல்பட்டி, என்.ஜி.ஓ நகர், பள்ளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் காலையில் வேலைக்கு செல்வோர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அல்லோலப்படுகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்தடை ஏற்படுவதால், தூக்கம் கெட்டு அவதிப்படுகின்றனர். எனவே காரியாபட்டி பேரூராட்சி பகுதிகள் முழுவதையும் காரியாபட்டி உயர்மின் அழுத்தம் பாதையில் இணைத்து, பெரியார் நகர், கே.செவல்பட்டி, பள்ளத்துப்பட்டி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் நடவடிக்கை எடுக்காத மின்துறை அதிகாரிகளை கண்டித்து, மக்களை போராட தூண்டாதே என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அப்பகுதிகளில் சுவரொட்டி ஒட்டி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>