பராமரிப்பில்லாத கழிப்பறை பொதுமக்கள் அவதி

பந்தலூர் :  பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பஜாரில் பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கும் கழிப்பறையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அய்யன்கொல்லி பஜார் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. மேலும்  ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.

தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எல்லைப்பகுதியான கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள்   வந்து செல்கின்ணனர்.

இந்நிலையில் பஜார் பகுதியில் சேரங்கோடு ஊராட்சி மூலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வந்த பொதுக்கழிப்பறை கடந்த பல மாதங்களாக பராமரிப்பு இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஒருசிலர் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பதால் நோய்பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கழிப்பறையை சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் சீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்வருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>