இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் ரத்து

லண்டன்: இந்தியாவில் கடந்த ஜனவரியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் இங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததால் தனது பயணத்தை அவர் ரத்து செய்தார். இதனை தொடர்ந்து அவரது இந்திய பயணம் ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டு இருந்தது. அடுத்த வாரம் பிரதமர் போரீஸ் ஜான்சன் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மீண்டும் 2வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து மற்றும் மத்திய அரசு சார்பில் வெளியான அறிவிப்பில், ‘தற்போது நிலவி வரும் கொரோனா சூழல் காரணமாக பிரதமர் போரீஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>