ஊரடங்கால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்பட கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்!!

டெல்லி : ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்பட கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலம் மற்றும் யூனிய பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாநில அரசுகள் விதிக்கும் புதிய கட்டுப்பாடுகளால் கொரோனா தடுப்பூசி மையத்திற்கு மக்கள் சென்று வருவதற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது என்று அதில் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில் மருத்துவமனையின் தனி கட்டிடத்தில் தடுப்பூசி மையம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான பிரதான ஆயுதமான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>