கோயில் திருவிழா நடத்தலாம் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: பாஜ தலைவர் எல்.முருகன் சொல்கிறார்

பெரியகுளம்: தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. அரசு விதித்த கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோயில்களில் திருவிழா நடத்தலாம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் சமீபத்தில் காலமானார். அவரது மறைவையொட்டி, தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டுக்கு, பாஜ மாநில தலைவர் எல்.முருகன் நேற்று வந்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர் பின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கொரோனா விஷயத்தில் தமிழகத்தில் மக்கள் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். எனவே கொரோனா கட்டுக்குள் உள்ளது. அரசு விதித்த கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோயில்களில் திருவிழா நடத்தலாம்’’ என்றார்.

Related Stories:

>