பாரதி பூங்காவில் போலீசார் ரோந்து: சமூக இடைவெளி கடைபிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. இன்று வரலாறு காணாத அளவுக்கு ஒரே நாளில் 715 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 47,108 ஆகவும், இதுவரை 705 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனா பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியே வந்தால் வழக்கு பதியவும், வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் புதுவை பாரதி பூங்காவில் பெரியகடை போலீசார் இன்று காலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூங்காவில் இருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சிலர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இல்லாமலும் அமர்ந்து இருந்ததை பார்த்தனர். அவர்களிடம் போலீசார், முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தினர்.

Related Stories:

>