சாரி பாஸ்... நாங்க தேடி வந்த ஆளு நீங்க இல்ல: டாஸ்மாக் ஊழியர்களை ரவுண்டு கட்டி அடித்துவிட்டு ஹாயாக சென்ற ஆசாமிகள்...விராலிமலை அருகே பரபரப்பு

விராலிமலை: விராலிமலை தெற்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் செந்தில்குமார் (45). விராலிமலை கீரனூர் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு 9.45 மணியளவில்  மாதிரிபட்டி மதுக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது நண்பரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது 3 பேர் வந்து உங்களிடம் பேசவேண்டும் என்று கூறி அருகில் உள்ள காட்டுக்குள் கூட்டிச் சென்று அரிவாள் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் 3  பேரும் செந்தில்குமாரிடம் நாங்கள் தேடிவந்த ஆள் நீ இல்லை என்று கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

இதேபோல், விராலிமலை அருகே உள்ள தென்னம்பாடி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணமூர்த்தி (43). இவர் மாதிரிபட்டி மதுக்கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் குடிசாத்தூர் பகுதியைச்  சோந்த ராஜநே–்திரன் மகன் மனகராஜ் (45). இவர் விராலிமலையில் தங்கி அதே மதுக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று வேலை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது  இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்க தொடங்கினர்.

இதில் வலி தாங்க முடியாமல் இருவரும் அலறியுள்ளனர். இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தப்பி சென்றனர்.காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் மனகராஜ் இருவரும் விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

செந்தில்குமாருக்கு கையில் நரம்பு துண்டாகி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை விராலிமலை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>