நல்லம்பள்ளி அருகே ஊத்துப்பள்ளம் தடுப்பணையில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஆடி மாதம் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும், வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த கோயிலுக்கு தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானோர் சடங்கு செய்வதற்காக கோயிலுக்கு அருகே உள்ள ஊத்துப்பள்ளம் தடுப்பணையில் நீராடுகின்றனர்.

அப்போது, உடுத்திருக்கும் துணியை அப்படியே தடுப்பணையில் விட்டுச் செல்வது வாடிக்கையாக உள்ளத. இந்நிலையில், தற்போது நீரோட்டம் குறைந்துள்ளதால், துணிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளில் தேங்கிக்கி கிடக்கிறது. ஒரு சில இடங்களில் துணிகள் குவிந்து கிடப்பதால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, தேங்கிக் கிடக்கும் துணிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: