சட்டமேதை டாக்டர் BR அம்பேத்கரின் 130வது பிறந்தநாள்: கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை.!!!

சென்னை: சட்டமேதை டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் ‘‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’’ இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளாதார அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர்.

தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பி. ‘‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’’ என அழைக்கப்படும் ‘‘பீம்ராவ் ராம்ஜி அவர்களின் 130வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  

இந்நிலையில், சட்டமேதை டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தியப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மாபெரும் தலைவர் அம்பேத்கர். அம்பேத்கர் வழியில்  தமிழக மக்களுக்கு திமுக நிச்சயம் கடமையாற்றும் என்றார்.

Related Stories:

>