தமிழகத்துக்கு வழங்கி வந்த கோட்டாவில் மண்ணெண்ணெய் 80% அதிரடியாக குறைப்பு: மத்திய அரசு நடவடிக்கை

சென்னை: தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்படும் பொது விநியோக திட்ட மண்ணெண்ணை அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநிலத்தின் மொத்த தேவையில் 20 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மண்ணெண்ணெய் பெற தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து அனைத்து நியாயவிலை கடைகள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: