மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

மன்னார்குடி: மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மன்னார்குடி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. 10-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திருவிழா என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மன்னார்குடியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள், 3 நாட்களாக திருப்பி அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடுப்பூசி போட வருபவர்களை ஏதாவது ஒரு காரணம் கூறி மருத்துவமனை ஊழியர்கள் தட்டிக்கழிப்பதாக புகார் கூறியுள்ளனர். நேற்று தஞ்சையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு மாவட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக சிறப்பாக இருந்து வருகிறது என சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி இல்லாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசு தலைமை மருத்துவமனை மட்டுமின்றி திருவாரூர் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரும் பொதுமக்கள் கூறுகின்றனர். கடந்த 3 நாட்களாகவே மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Related Stories: