தொற்றிலிருந்து காத்திட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்-அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் : கொரோனா தொற்றிலிருந்து காத்திட மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அரியலூர் கலெக்டர் ரத்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.அரியலூர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை மாவட்ட கலெக்டர் ரத்னா, திறந்து வைத்து தெரிவித்ததாவது:

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோன தொற்றால் பாதிக்கப்படைந்த நபர்களுக்கு உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் அறிகுளிகள் அற்ற கொரோனா தொற்றாலர்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சையுடன் சித்த மருத்துவ முறையின் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் தொழிற் பயிற்சி நிலைய மாணவர் விடுதியில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில் 23 படுக்கை வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மையத்தில் நிலவேம்பு குடிநீர், கபசூர குடிநீர், சூரணம் உள்ளிட்டவைகளுடன் அலோபதி முறையிலான சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளன. இம்மையத்தில் சித்த மருத்துவ அலுவலர், அலோபதி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

இம்மையத்தில், நோய் அறிகுறிகள் அல்லது சந்தேகத்திற்கு ஆட்படும் பட்சத்தில் மருத்துவமனைக்கு செல்ல தயங்குபவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவார்கள். மேலும், இம்மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு யோகா பயிற்சி, மூச்சுப்பயிற்சி, கபசூர குடிநீர், சிற்றுண்டி, உடல் தேற்றி மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவைகள் சித்த மருத்துவர்கள் மற்றும் அலோபதி மருத்துவர்கள் மூலமாக சிகிச்சைகளுடன் கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளும் அளிக்கப்படவுள்ளன.

மேலும், முதற்கட்டமாக அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மையத்தில் சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும் கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் இடங்களை கண்டறியப்பட்டு, தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் 108 அவசர கால ஊர்தி மூலமாக மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

எனவே, தமிழக அரசின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை காத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: