அரூர் பகுதியில் விளைச்சல் குறைவால் புளி விலை உயர்ந்தது

அரூர் : அரூர் பகுதி சாலையோரங்களில் உள்ள புளிய மரங்களில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் புளி அறுவடை பணிகள் தொடங்கும். இதில் சிட்லிங், சித்தேரி மலை கிராமங்களில் அறுவடை செய்யப்படும் புளி மொத்த மண்டிகளில் விலைக்கு வரும்.

இந்த ஆண்டு சாலையோர புளிய மரங்களில் விளைச்சல் குறைந்ததுடன், மலை பகுதியிலும் விளைச்சல் குறைந்ததால் மண்டிகளுக்கு மிக குறைந்த அளவே புளி வரத்து வருகிறது. கடந்த ஆண்டு சுத்தம் செய்து பதப்படுத்திய புளி, அதிகப்பட்சமாக கிலோ ₹90க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கிலோ ₹120க்கு விற்பனை செய்யப்படுகிறது. புளி அறுவடை முடியவடையும் நிலையிலும், மண்டிகளுக்கு வரத்து தொடங்கவில்லை. புளி விளைச்சல் குறைந்ததால், விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: