ஓசூர்: ஓசூர் பகுதியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஓசூரில் நல்ல மண்வளம், சீரான தட்பவெப்பம் நிலவுவதால், இங்கு அதிகளவில் காய்கறிகள், மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக, இங்கு விளையும் முட்டைகோஸ்களை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பவில்லை. கடந்த 2 மாதத்திற்கு முன்பு 100 கிலோ கொண்ட மூட்டை ₹3 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது 100 கிலோ உள்ள மூட்டை ₹80 முதல் ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது.