கொரோனா தொற்று பரவல் காரணமாக 6 முதல் 9ம் வகுப்புகள் நடத்தக்கூடாது: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல்

கோலார்: கொரோனா தொற்று பரவல் காரணமாக 6 முதல் 9ம் வகுப்புகள் நடத்தகூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளதை மீறி வகுப்பு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எச்சரித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளியில் வகுப்பு நடத்தக்கூடாது என்று அரசு வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.

அதை ஒவ்வொரு பள்ளியும் பின்பற்ற வேண்டும். அரசு உத்தரவு மீறி வகுப்புகள் நடத்தினால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக அரசு உத்தரவை அரசு பள்ளிகள் பின்பற்றும், தனியார் பள்ளிகள் தான் இந்த விஷயத்தில் சரியாக செயல்பட வேண்டும்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் 70 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதையேற்று 70 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதலாக வசூலிப்பதாக பெற்றோர்களிடம் இருந்து புகார் வந்தால், பள்ளி நிர்வாகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சில பள்ளிகள் ஏற்கனவே முழு கட்டணம் வசூல் செய்திருந்தால், அதை வாபஸ் கொடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: