மயிலாடுதுறையில் முகவர்கள் இல்லாமல் விவிபேட் சீலை அகற்றிய அதிகாரிகள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி செருதியூர் ஸ்ரீவாணிவிலாஸ் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி 263ல் 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. இரவு 11 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேனில் ஏற்றப்பட்டது. அப்போது விவிபேட் இயந்திரத்தில் பேட்டரி அகற்றப்படாததை அறிந்த அதிகாரிகள், சிறிது நேரத்தில் வாகனத்தில் இருந்து விவிபேட் இயந்திரத்தை இறக்கி முகவர்கள் இல்லாமல் சீலை உடைத்து பேட்டரியை கழற்றினர். இதை பார்த்த அனைத்து கட்சியினர், வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டனர். மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலர் பாலாஜி வந்து விவிபேட் இயந்திரத்தை பார்வையிட்டார். இது அதிகாரிகளின் அறியாமையால் ஏற்பட்ட தவறு, பதிவான வாக்குகளில் எந்த குளறுபடியும் ஏற்படாது என்று வாக்குறுதியளித்தார். இதையடுத்து முகவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: