தமிழ்நாட்டில் கோடை மழை 69% குறைவாக பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை 69% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பேரணாம்பட்டில் 12 செ.மீ. மழை பதிவு

வேலூர் மாவட்டத்தில் நேற்று மிக கனமழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டுக்கு அடுத்தபடியாக அணைக்கட்டில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

பென்னாகரத்தில் 6 செ.மீ. மழை பதிவு:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. தருமபுரியில் 4 செ.மீ., ஒகேனக்கல்லில் 3.5 செ.மீ., அரூர்-3.1 செ.மீ., பாப்பிரெட்டிப்பட்டி, மாரண்டஹள்ளியில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், பர்கூர், பையூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆம்பூர், மேலலத்தூர், தருமபுரி, வாணியம்பாடி, நாட்றாம்பள்ளியில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 20 இடங்களில் 3 செ.மீ.-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் கோடை மழை 69% குறைவாக பெய்துள்ளது:

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மே 1 முதல் மே 6 வரையிலான காலகட்டத்தில் 19.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 71.4 மி மீ ஆகும். ஆகவே கோடை மழை இதுவரை இயல்பை விட 72% குறைவாக பெய்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 69 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 75 மி.மீ. பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 23.2 மி.மீ. பதிவாகியிருக்கிறது.

The post தமிழ்நாட்டில் கோடை மழை 69% குறைவாக பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: