மதுரவாயல் வாக்குசாவடி அருகே பரபரப்பு: பொதுமக்களை பார்த்து ஜாதியை குறிப்பிட்டு அமைச்சர் திட்டியதால் பரபரப்பு: சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ

சென்னை: மதுரவாயலில் வாக்குச்சாவடி அருகே அமைச்சர் பென்சமின் ஜாதியை குறிப்பிட்டு ஆபாசமாக பேசினர். இது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகள் சென்னை துணை மேயராகவும் 5 ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்த பென்சமின் மீண்டும் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடுகிறார். இந்நிலையில் மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட நொளம்பூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு அவர் வந்தார். அப்போது அவருக்கு எதிராக வேறு கட்சிகளை சேர்ந்த சிலர் கட்சி கொடியை காண்பித்து வாழ்க என்று கூறினர். இதனால் டென்ஷன் ஆன அமைச்சர் ெபன்சமின், வாக்களிக்க வந்த மக்களை பொது இடத்தில் வைத்து அசிங்கமான வார்த்தையில் பேசுவது மட்டும் இல்லாமல் ‘நான் என்ன பூணூலா போட்டு இருக்கேன்’ என்று ஒரு குறிப்பிட்ட ஜாதியை மையப்படுத்தியும், திட்டியும் தகாத வார்த்தையால் பேசி உள்ளார்.

அவர் தோல்வி பயத்தில் தனது சமுதாயத்தைதவிர வேறு சமுதாயத்தினர் யாரும் வாக்களிக்க கூடாது என்ற என்னத்தில் மதுரவாயல் 92வது வார்டில் வாக்களிக்க வந்த பொது மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் ஜாதி கலவரத்தை தூன்டும் விதமாக தகாத வார்த்தையால் ஆக்ரோஷமாக மிரட்டி வாக்காளர்களை அச்சுறுத்தும் விதமாக பேசியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். உடனே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வேட்பாளர் பென்சமினை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அமைச்சர் பெஞ்சமினிடம் கேட்டபோது, ‘‘நான் வாக்குச் சாவடிக்கு சென்றபோது எனது காரை வழிமறித்து சிலர் மாற்றுக் கட்சி கொடியை காட்டினர். நான் பொறுமையாக சென்றேன். அப்போதும் அவர்கள் அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்யும் விதமாக நடந்து கொண்டதுடன், பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.  

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த செயலில் ஈடுபட்டவர்களை கண்டித்தேன். போதையில் இருந்தவர்களை கண்டித்ததோடு அவர்களை போலீசிடம் ஒப்படைத்தேன். தாய்மார்களை அவமதிக்கும் வகையில் நடந்ததை தட்டிக்கேட்கும் விதமாக நான் கண்டித்தேன். பெண்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை தடுக்கும் விதமாக செயல்பட்டனர். நான் இதுவரை யாரையும் தவறாகவோ மரியாதை குறைவாக பேசியதில்லை என்றார் அமைச்சர்

பென்சமின்.

Related Stories: