வெயில் கொடுமையை தவிர்க்கும் வகையில் காலையிலேயே நீண்ட வரிசையில் வாக்களிக்க வந்த வாக்காளர்கள்

சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக, திமுக, அமமுக-தேமுதிக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 6.28 கோடி வாக்காளர்கள் உள்ள தமிழகத்தில், ஏற்கனவே 1,03,202 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்கு பதிவு நடந்தது. கடைசி 1 மணி நேரம் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக காலையிலேயே மக்கள் வரிசையில் காத்திருக்க தொடங்கினார்கள். தமிழகம் முழுக்க பல தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் 6.30 மணிக்கே வரத் தொடங்கினர்.

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்து வருகிறது. அதை தவிர்க்கும் வகையில் காலையிலேயே வாக்களித்து விட வேண்டும் என்று வாக்காளர்கள் பலர் வந்ததால் வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே பல மையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் காலை நேரத்தை தேர்வு செய்து வந்தனர். காலை முதலே மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வந்ததால் கண்டிப்பாக இந்த முறை வாக்கு பதிவு சதவிவீதம் அதிகரிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

Related Stories: