தேர்தல் பணியில் அதிகாரிகள் தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தல் அமோகம்

போச்சம்பள்ளி : தேர்தல்  பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால், போச்சம்பள்ளி பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது.கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், பாரூர், அரசம்பட்டி, மஞ்சமேடு வழியாக செல்வதால், அப்பகுதிகளில் ஆண்டு முழவதும் நீரோட்டம் காணப்படுகிறது.

சமீபகாலமாக ஆற்றில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது. அகரம், நெடுங்கல், பேரூ அள்ளி, பண்ணந்தூர், பாரூர், மடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணலை குவித்து வைத்து,  இரவு நேரத்தில் மூட்டைகளாக கட்டி கழுதைகள்  மீது வைத்து கடத்தி வருகின்றனர்.

தற்போது சட்டமன்ற  தேர்தல் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால், மணல் கடத்தல் அதிகரித்துள்ளது.

இரவில் கழுதைகள் மூலம் மணல் கடத்தியவர்கள், தற்போது பகல் நேரத்தில் தைரியமாக டிப்பர் லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: