வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கல் புகார் அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் வீட்டில் ரெய்டு: 2.35 லட்சம் பறிமுதல்

புதுக்கோட்டை: வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின்பேரில் புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் தேர்தல் செலவின பார்வையாளர் புதுக்கோட்டை  மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு கொடுக்க அதிமுக சார்பில் பல கோடி பதுக்கி விநியோகிக்கப்பட்டு வருகிறது.  அதிலும் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் ஓட்டுக்கு  ₹2000 வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் பணம் பதுக்கல் தொடர்பான புகாரையடுத்து  வருவாய்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிமுக வேட்பாளர்கள்,  நிர்வாகிகள் வீடுகளில் சோதனையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு முதல்நிலை ஒப்பந்ததாரரான புதுக்கோட்டை சோத்துபாளை கிராமத்தை சேர்ந்த முருகேசனின் எழில்நகர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் நேற்று காலை 8.30 மணியளவில் தேர்தல் செலவின பார்வையாளர் தினேஷ்குமார்மீனாள், பொதுப்பார்வையாளர் கார்னிதான் உள்ளிட்ட 4 பேர் குழு மற்றும் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். வீடு முழுவதும் சோதனையிட்ட அவர்கள், பின்னர் மாடியில் உள்ள மேல்நிலை தொட்டியிலும் சோதனையிட்டனர். ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் 2.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோட்டில் தலா 500, 1000 விநியோகம்: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியின் தமாகா வேட்பாளராக யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரது சார்பில் அதிமுகவினர் ஈரோடு மாநகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து வருவதாக, நேற்று முன்தினம் இரவு தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. அதன்பேரில், தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு வளையக்கார வீதிக்கு விரைந்து சென்று, வீடு வீடாக பணம் விநியோகம் செய்து வந்த அதிமுகவை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 60 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக யுவராஜாவின் உறவினர் கல்லூரி ஊழியர்கள் 2 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வாக்காளர்களுக்கு தலா 500, 1000 என வழங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: