வணிகர்களின் கோரிக்கைகளுக்கு தேர்தல் அறிக்கையில் இடம் வணிகர் பேரமைப்பு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

சென்னை: தமிழக வணிகர்களின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்த மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:  சிறு,குறு ஏழை, எளிய வணிகர்களுக்கு குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் வட்டியில்லாக் கடனாக அளிப்பது, வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்கும், வணிகவரி வழக்குகளில் 25% முன்வைப்புத்தொகை என்பது தளர்த்தப்படும், நகராட்சி, உள்ளாட்சிக் கடைகளின் வாடகை உயர்வு விகிதங்கள், மறு ஆய்வு செய்யப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

சிறு,குறு அடித்தட்டு வணிகர்களையும் வணிகர்நல வாரியத்தில் உறுப்பினராக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை வணிகர் சமுதாயம் முழு மனதுடன் வரவேற்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கின்ற திமுக தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு பேரமைப்பு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: