திமுக ஆட்சிக்கு வந்ததும் இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளே போவது உறுதி: வைகோ பேச்சு

சாத்தூர்: சாத்தூர் வடக்கு ரத வீதியில் மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: இந்தியாவில் ஜனநாயக யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் 200 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடுகிறார்கள். இதில் 240 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். மதிப்பு கூட்டு வரியை குறைத்தால் காஸ் சிலிண்டர் குறையும். இதனை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமையும்போது தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றுவார். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று மோடி கூறுகிறார். அவருக்கு திமுகவின் வரலாறு தெரியாது.  

திராவிட தந்தை பெரியார் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று குரல் எழுப்பினார். பேரறிஞர் அண்ணா பெண்களுக்கு சொத்துரிமையில் பங்கு வேண்டும் என்று குறிப்பிட்டார். திமுக தலைவர் கலைஞர் அதனை சட்டம் ஆக்கினார்.

கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடை அறிவித்தார். தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை 40% அறிவித்துள்ளார். முதல்வர், துணை முதல்வரும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக கவர்னரிடம் ஸ்டாலின் மனு கொடுத்துள்ளார். இது தற்போது கிடப்பில் போடப்பட்டாலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது இவர்கள் உள்ளே போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: