செல்பிக்கு பயந்து நடிகை நமீதா பாதியில் ஓட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பாஜ சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார். இவருக்கு உள்ளூர் நபர்களை விட வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள்தான் அதிகளவில் பிரசாரம் செய்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் நடிகை நமீதா வாக்கு சேகரித்தார். இரண்டாம் பீட் பகுதியில் பிரசாரம் செய்ய வந்தபோது அவரை பார்க்கவும், செல்பி எடுத்துக் கொள்ளவும் மக்கள், ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தனர். இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த நடிகை நமீதா மக்களை கண்டு தெறித்து ஓடி பிரசாரம் செய்யாமல் தொண்டர்கள் புடை சூழ பாதுகாப்பாக காரில் ஏறி சென்று விட்டார்.

Related Stories: