மக்கள் நேரடியாக என்னிடம் புகாரளிக்கலாம்: பரந்தாமன் வாக்குறுதி

சென்னை: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் நேற்று சூளை, ஓட்டேரி போன்ற பகுதிகளில் மக்களை சந்தித்து, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, கொரோனா நிதி ரூ.4000, பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும், தடையில்லா குடிநீர், கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை எடுத்து கூறி வாக்கு சேகரித்தார். மேலும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம், குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து தூய நீர் வழங்குதல், புதிய டிரான்ஸ்பார்ம்கள் அமைப்பது, பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி, பொதுக்கழிப்பறை, வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி, உள்ளாட்சி தேர்தலை நடத்தி குறைகளை சரிசெய்தல், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை, பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, நவீன உடற்பயிற்சி கூடங்கள், சமூக நலக்கூடங்கள் அமைத்தல், 6 இடங்களில் மக்கள் குறைதீர் மையங்கள் அமைப்பது என தான் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து தெரிவித்தார். தொடர்ந்து முக்கிய அமைப்புகள், சமூக ஆர்வலர்களை நேரில் சந்தித்து வாக்குசேகரித்தார். தொகுதியின் பிரச்னைகளை என்னிடம் நேரடியாக தொலைபேசியில் தெரிவிக்கலாம். உடனே களத்திற்கு வந்து தீர்த்துவைப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். இதனிடையே, நேற்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Related Stories: