பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி: பரந்தாமன் அறிவிப்பு

சென்னை: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் நேற்று மாலை ஜகநாதபுரம், மங்களபுரம், பள்ளி ரோடு, பிருந்தாவனம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார். மக்கள் மலர் தூவி, சால்வை அணிவித்து அவரை வரவேற்றனர். அப்போது, பரந்தாமன் பேசுகையில், ‘திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, கொரோனா நிதி ரூ.4000, பெண்களுக்கு வேலைவாய்பில் முன்னுரிமை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும், தடையில்லா குடிநீர் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் விரைந்து நிறைவேற்று வேன்.

இந்த தொகுதிக்காக தான் நிறைவேற்ற வைத்துள்ள வாக்குறுதிகளான வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம், குடிநீரில் கழிவு நீர் கலக்காமல் தடுத்து தூய நீர் வழங்குதல், புதிய டிரான்ஸ்பார்ம்கள் அமைத்து மின் பிரச்னை சரிசெய்தல், வாட்ஸ்அப் குழுவில் மக்கள் புகார் அளிக்கும் வசதி, பெண்கள் சுயதொழில் தொடங்க பயிற்சி, பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, பொதுக்கழிப்பிடம், உள்ளாட்சி தேர்தலை நடத்தி குறைகளை சரிசெய்தல், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு, நவீன உடற்பயிற்சி கூடம், சமூக நலக்கூடம் அமைத்தல், 6 இடங்களில் மக்கள் குறைதீர் மையங்கள் அமைத்து, மக்களை நேரில் சந்தித்து கூறைகளை தீர்ப்பது என மொத்தம் 12 வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்,’ என்றார். இதை மக்களும் வரவேறு, தங்களது வாக்கு திமுகவிற்கு தான் என ஆதரவளித்து வருகின்றனர்.

Related Stories: