தொகுதி வளர்ச்சிக்கு 12 திட்டங்கள்: பரந்தாமன் அறிவிப்பு

சென்னை: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி நேற்று மாலை, எழும்பூர் வடக்கு பகுதி 104வது வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, அனைவருக்கும் வீடு என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும், என தெரிவித்தார். மேலும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம், குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து, தூய குடிநீர் வழங்குதல், புதிய டிரான்ஸ்பார்ம்கள் அமைத்து மின்பிரச்னை சரிசெய்தல், பெண்கள் சுயதொழில் தொடங்க பயிற்சி அளித்தல், பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தி தருதல், வாட்ஸ்ஆப் குழு மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி, உள்ளாட்சி தேர்தலை நடத்தி குறைகளை சரிசெய்தல், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, விளையாட்டை ஊக்குவிக்க நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைத்தல், சமூக நலக்கூடங்கள் அமைத்தல், 6 இடங்களில் மக்கள் குறைதீர் மையங்கள் அமைத்தல் என மொத்தம் 12 வாக்குறுதிகளை அளித்தார். மக்களும் நல்ல வரவேற்பு அளித்து, எங்கள் ஓட்டு உங்களுக்கே. நீங்கள் வெற்றி பெறுவது உறுதி என வாழ்த்தி வருகின்றனர்.

Related Stories: