கொரோனா தொற்று பரவலை தடுக்க ஈஸ்டர் நாளில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை: சர்வதேச கிறிஸ்துவ சங்கம் அழைப்பு

பெங்களூரு: உலகை அச்சுறுத்தி வரும் நோயான கொரோனாவை விரட்ட உலக மக்களின் பாவங்களை சுமந்து தீர்த்த இறைமகன் இயேசு உயிர்தெழுந்த நாளில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சர்வதேச கிறிஸ்துவ சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.  இது குறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இரண்டாம் உலக போருக்கு இணையான அச்சம் மற்றும் பதட்டத்தை கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ளது. உலகில் 190 நாடுகளில் இந்நோயின் தாக்கத்தில் சிக்கி உயிர் சேதம்  சந்தித்து வருகிறது. இந்த தொற்றை முற்றிலுமாக ஒழிக்க உலக சுகாதார மையம் மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இடையில் சில மாதங்கள் சீராகி வந்த நிலையில், தற்போது கொரோனா 2வது அலை உருவாகி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் சர்வதேச கிறிஸ்துவ சங்கம் வரும் 4ம் தேதி இயேசு உயிர்தெழுந்த நாளை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடும் நாளில் இரவு 8   முதல் 8.30 மணி வரை 30 நிமிடம் ஒவ்வொரு கிறிஸ்துவர்களும் தங்கள் வீட்டின் மேல் கூரை, வீட்டு வாசலில் மெழுகுவர்த்தி கையில் ஏந்தி கொரோனா தொற்று விலக பிரார்த்தனை செய்ய வேண்டும்.

உலகத்தின் பாவத்தை சுமந்த ஆட்டு குட்டியானர், உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறார் என்பது நமது நம்பிக்கையாக உள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒரு மனதுடன் கொரோனா தொற்று ஒழிய ஆண்டவரிடம் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

Related Stories: