ஒரு வாரத்தில் 3வது முறையாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, தினமும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பல நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டர் 100 என வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், 5 மாநில தேர்தல் காரணமாக, சமீப நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 3வது முறையாக நேற்று பெட்ரோல், டீசல் விலையில் முறையே லிட்டருக்கு 22, 23 பைசா குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92.58 பைசாவாகவும் டீசல் லிட்டர் 85.88 பைசாவாகவும் உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90.56 ஆகவும், டீசல் 80.87 ஆகவும் உள்ளது. கடந்த 6 மாதத்தில் முறையாக கடந்த 24ம் தேதியும், அதற்கு அடுத்த நாளும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. ஒரே வாரத்தில் 3 முறையாக விலை குறைக்கப்பட்ட போதிலும், பெட்ரோலுக்கு 61 பைசாவும், டீசலுக்கு 60 பைசாவும் மட்டுமே குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: