ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் ேநற்று வண்ணாரப்பேட்டை, டி.எச்.சாலையில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, சோலையப்பன் தெரு, அவதானராமசாமி தெரு, வள்ளுவன் தெரு, தெலுங்கு தெரு, நல்லப்ப வாத்தியார் தெரு, ஆண்டியப்பன் தெரு, வரதராஜபெருமாள் தெரு, ராமானுஜம் தெரு, மொட்டைதோட்டம், வெங்கடகிருஷ்ணன் தெரு, பொம்மி சிவராமுலு தெரு, எம்.எஸ்‌. நாயுடு தெரு, பசுவைய்யன் தெரு, ஆறுமுகம் தெரு‌ ‌உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உயிருக்கு பயப்படாமல் நிவாரண உதவி வழங்கினேன். தொகுதி மக்களுக்கு 2 மாத காலத்திற்கு தொடர்ந்து அம்மா உணவகங்களில் 3 வேலை முட்டை, வாழைப்பழத்துடன் எனது சொந்த செலவில் உணவு வழங்கப்பட்டது. ராயபுரத்தில் உள்ள 52 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட மளிகைப்பொருள் வழங்கினேன்.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் நான் முன்மாதிரியாக இருந்தேன். கொரோனாவின்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர தொடர்ந்து அரசுடன் இணைந்து செயல்பட்டேன். இதுபோல் தொகுதி மக்களின் பிரச்னைகளையும், அடிப்படை தேவைகளையும் தீர்த்து வைப்பேன்,’ என்றார். பிரசாரத்தின்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

Related Stories: