கொளத்தூர் தொகுதியில் அமைச்சர் கொடுத்த நெருக்கடி: 3 மணி நேரத்தில் செயற்பொறியாளர் மாற்றம்

சென்னை: சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக தணிகைவேல் உள்ளார். அவருக்கு கீழ் செயற்பொறியாளராக செந்தில்நாதன் உள்ளார். இந்நிலையில் செந்தில்நாதனுக்கும் அதிமுகவினருக்கும் பிரச்னை ஏற்பட்டது.  மேலும், செந்தில்நாதன் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிவதால் அவரை மாற்ற வேண்டும் என கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் சிலர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் நேற்று காலை புகார் அளித்தனர்.

இந்த, புகார் கொடுத்து 3 மணி நேரத்தில் செந்தில்நாதனை மாற்றி உடனடியாக அவரை 12 வது மண்டல அலுவலகத்தில் ரிப்போர்ட் பண்ணும்படி உத்தரவு வெளிவந்தது. இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது ஏற்கனவே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சில அதிமுகவினர் செந்தில்நாதன் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்ததாகவும் தேர்தல் நேரத்தில் சென்னையை  சேர்ந்த அமைச்சர் ஒருவரை அணுகி உடனடியாக இவரை மாற்றவில்லை என்றால் நாம் தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை வாங்க முடியாது என்று கூறி  அவர் மூலமாக அழுத்தம் கொடுத்து, 3 மணி நேரத்தில் செயற்பொறியாளரை மாற்றி விட்டதாகவும் தெரிவித்தனர்.

Related Stories: