ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து பிரசாரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்-கனிமொழி எம்.பி பேச்சு

ஏரல் :  தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிரப்பப்படும் என ஏரலில் காங். வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து நடந்த பிரசாரத்தில் கனிமொழி எம்.பி பேசினார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து ஏரலில் கனிமொழி எம்.பி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;  

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜின் தந்தை ஊர்வசி செல்வராஜ் 2006ல் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணியாற்றியவர். அவருக்கு நீங்கள் ஆதரவு கொடுத்தது போல் அவரது மகன் ஊர்வசி அமிர்தராஜிக்கும் ஆதரவு கொடுத்து அவரை வெற்றி பெற செய்திட வேண்டும்.

இந்த ஆட்சியில் ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பு இல்லை என்றும் கைரேகை பதிவாகவில்லை என்றும் கூறி மக்களை அலைய வைத்திடும் நிலைதான் உள்ளது. அரிசி வாங்கினால் அளவு குறைவாக உள்ளது. இதனை வீட்டில் கொண்டு சமைக்கலாம் என நினைத்தால் சமைக்கவும் முடியாத நிலையில் அரிசி தரம் குறைவாக உள்ளது.

ரேஷனில் ஊழல், ஏரி, குளம் தூர் வாருவதில் ஊழல், பிளிச்சிங் பவுடர் வாங்கியதில் ஊழல் இப்படி அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. மத்திய அரசு எதை சொன்னாலும் தலையாட்டும் அரசு தான் தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழ்நாட்டை டெல்லியில் அடகு வைத்துவிட்டனர். மத்திய, மாநில அரசுகள் மதம், ஜாதி என்ற பெயரில் அரசியல் செய்து நம்மிடம் பிரிவினை உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் வேலை வாய்ப்பே இல்லாத ஒரு ஆட்சி நடந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும்.  

 தமிழ்நாட்டில் விவசாய கடன் ரத்து, கல்வி கடன் ரத்து, மகளிர்களுக்கு டவுன் பஸ்சில் இலவச பயணம், 110 நாள் வேலைதிட்டம் 150 நாளாக உயர்வு, குடும்பதலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவி தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில்  அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கருணாநிதி பிறந்தநாளன்று ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது. அனைத்தும் நிறைவேற்றிட நீங்கள் இத்தொகுதியில் கை சின்னத்தில் வாக்குகள் அளித்து ஊர்வசி அமிர்தராஜை வெற்றி பெற செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள்எஸ்.ஜே.ஜெகன், பிரம்மசக்தி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், வைகுண்டம் ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு பிஜி ரவி, மேற்கு கொம்பையா, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரராஜன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரை, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், அனஸ், வேங்கையன், பாலமுருகன், ஆனந்த், கார்த்தீசன், சாதிக், நகர செயலாளர்கள் ஏரல் பார்த்திபன், சாயர்புரம் அறவாழி, பெருங்குளம் சுடலை,

முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் காளிதாஸ், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், பழைய காயல் கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயசங்கர், சிறுத்தொண்டநல்லூர் கிளை செயலாளர்கள் சேகர், கொற்கைமாறன், மாவட்ட பிரதிநிதி செந்தில் ஆறுமுகம், இளைஞரணி முகமது பக்மி, ராஜவேலு, கண்ணன், காங்கிரஸ் கட்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை, ஏரல் நகர தலைவர் பாக்கர்அலி, ஓபிசி முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட பொருளாளர் எடிசன், வை. கிழக்கு வட்டார தலைவர் தாசன், யூனியன் கவுன்சிலர் பாரத், மதிமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், ஏரல் நகர செயலாளர் பெஸ்டி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இலவச பொருட்கள் தரமானதா?

ஆழ்வார்திருநகரியில் காங்.வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து கனிமொழி எம்பி  பேசுகையில், ‘அதிமுக அரசு வழங்கிய இலவச பொருட்களான மிக்சி, மின்விசிறி உள்ளிட்டவை  உங்கள் வீட்டில் உள்ளதா?. அது சரியான முறையில் இயங்குகிறதா? என  திரண்டிருந்த கூட்டத்தினரிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவை கயலான் கடையில்  உள்ளது என்றும், கலைஞர் கொடுத்த டிவி மட்டும் நல்ல முறையில் இயங்குகிறது  என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் பெருமாள், ஒன்றிய செயலாளர் கொம்பையா பாண்டியன், ஸ்ரீவை நகர செயலாளர் பெருமாள், மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், மாவட்ட துணைசெயலாளர் கருணாகரன், ஆழ்வார்திருநகரி காங்கிரஸ் வட்டாரத் தலைவர் கோதண்டை, நகர தலைவர் சதிஷ்குமார், சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: