தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோபம்.. இன்று காலை முதல் #கோ பேக் மோடி ஹேஷ்டேக் தேசிய அளவில் முதலிடம் : பாஜக அதிர்ச்சி!!

சென்னை : தமிழகம் வரும் மோடிக்கு டிவிட்டரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இன்று காலை முதல் #கோ பேக் மோடி ஹேஷ்டேக் தேசிய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றது.அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய டெல்லியில் இருந்து தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.அந்த வகையில் தாராபுரத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் முருகனை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் செய்கிறார்.

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகி விடும். இன்று அதிகாலை முதலே கோ பேக் மோடி ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கறுப்புக் கொடி காட்டியும் கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ட்ரெண்ட் ஆகிவரும் #கோ பேக் மோடி ஹேஷ்டேக் இன்று காலை முதல் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. நீட், இந்தி திணிப்பு, விவசாய விரோத வேளாண் சட்டம், சிஏஏ உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வரும் மோடி அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்திப் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories: