மதுவை விற்று அரசு வருமானம் ஈட்டுவது சரியா?.. சீமான் கேள்வி

சென்னை: மதுவை விற்று அரசு வருமானம் ஈட்டுவது சரியா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 4ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை போரூரில் மதுரவாயல் நாம் தமிழர் வேட்பாளருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; எங்களுக்கு ஓட்டு போடுங்கள்; மற்ற கட்சிகளை பிடிக்கும் என்றால் எங்களை சுடுகாட்டில் போடுங்கள்.

சீமானுக்கு ஓட்டு போட்டால் ஒரு ஓட்டு வீணாய்ப் போய்விடுமா என்ன? தேர்தல் வரும் போது மட்டும் வெற்று அறிவிப்பை சில கட்சிகள் வெளியிடுகின்றன. அரை பவுன் தங்கம் கூட மனைவிக்கு கட்ட கூடிய வக்கற்ற நிலைக்கு தமிழர்களை ஆளாக்கிவிட்டனர். மதுவை விற்று அரசு வருமானம் ஈட்டுவது சரியா? கல்வி மாநில உரிமை; மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும். தமிழக மக்கள் 5-க்கும் 10-க்கும் கையேந்த வேண்டிய நிலையில் இருப்பதாகவும், இந்த நிலையே மாற்ற வேண்டும் என்பதற்காவே அரசியலுக்கு வந்ததாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: