தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் டி.கே.எம்.சின்னையா பிரசாரம்

சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா  தாம்பரம் வினோபா நகர், குண்டமேடு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திரண்டிருந்த மக்கள் மத்தியில் சின்னையா பேசுகையில், ‘அதிமுக அரசு பொங்கல் பரிசாக  ரூ.2500 வழங்கியுள்ளது. இது கொரோனா காலத்தில் மட்டுமல்ல. ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார்.

பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். ரேஷன் கடைகளுக்கு செல்லும் பெண்களின் சுமையை குறைக்கும் வகையில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே கொண்டும் வரும் திட்டம். குலவிளக்கு திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1500 வழங்கும் வழங்கும் திட்டம். துணிகளை துவைக்கும் பெண்களின் பாரத்தை குறைக்கும் வகையில் விலையில்லா  வாஷிங்மிஷின் உள்ளிட்ட திட்டங்கள் பெண்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னை வெற்றி பெற செய்தால் தாம்பரத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன்,’ என்றார். அதிமுக நகர செயலாளர் கூத்தன், நகர மன்ற துணை தலைவர் கோபிநாதன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் எட்வர்ட், நாகூர் ஹனி, மார்க்கெட் பாபு, சேலையூர் சங்கர், தாம்பரம் பாஜக கிழக்கு பகுதி தலைவர் வெங்கடசுப்பிமணியம், திவாகர், நடராஜன், பார்த்தசாரதி, சண்முகம், கணபதி, பாமக விநாயகம், தமாகா மணி மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: