அம்மா ஆசி வேண்டும்.. ஜி ஆசி வேண்டாம்.. சுவர் விளம்பரத்தில் மோடியை மறைத்த பாஜ வேட்பாளர்: சமூக வலைதளத்தில் வைரல்

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்களின் பிரசார பரப்புரைகள் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதேபோல் அதிமுக தொண்டர்களும் பாஜ மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால் அதிமுக வேட்பாளர்கள் பாஜவின் கொடியையும், நரேந்திர மோடியின் படத்தையும் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் பாஜ வேட்பாளராக அண்ணாமலை களம் காண்கிறார். இவருக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக சுவர் விளம்பரம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் முதலில் மோடியின் ஆசி பெற்ற வேட்பாளர் அண்ணாமலை என எழுதியுள்ளனர்.

பின்னர், கள நிலவரத்தை அறிந்து கொண்டு மோடியின் ஆசி பெற்ற வேட்பாளர் என்றால் ஓட்டே நமக்கு வராது என்ற பயத்தில், மோடியின் பெயரை அழித்து, ஜெயலலிதாவின் ஆசி பெற்ற வேட்பாளர் என மாற்றியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் போட்டியிடும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியிலும் இதே நிலைதான். இதைப்போன்று தமிழகம் முழுவதும் பாஜ போட்டியிடும் தொகுதிகளில் மோடி படத்தையும், பெயரையும் பயன்படுத்த முடியாமல் பாஜ வேட்பாளர்கள் திண்டாடி வருகின்றனர்.

Related Stories: