நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை..! புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.  

கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குண்டுராவ், வீரப்பமொய்லி, புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட், விசிக தலா 1 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்

* அங்கன்வாடி ஊழியர்களுக்கு போனஸ்

* நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை

* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறப்படும்

* புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்

* ஆதிதிராவிடர் வாரியத்தின் மூலம் வாங்கப்பட்ட கடன்கள் முழுமையாக ரத்து

Related Stories: