ஆற்காடு அருகே முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

ஆற்காடு :  ஆற்காடு அருகே மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா  வைரஸ் தொற்று தற்போது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இந்நிலையில், ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மணிமாறன் தலைமையில்  வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ்பாபு ராஜ்,  மாவட்ட துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் பிரேம் ஆனந்த்  ஆகியோர் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், ரவி, சத்யா, ஏகாம்பரம், சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள், அங்கிருந்த கடைகளில் முகக்கவசம் அணியாமல் இருந்த உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனர்.

இதில், ெமாத்தம் ₹5,300 அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து, அதிகாரிகள் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.

Related Stories: