நாக்பூர்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் மட்டுமே ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ₹57 கோடி நிதி திரட்டி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா பிராந்தியத்தில் மொத்தம் 11 மாவட்டங்கள் உள்ளன. இந்த பிராந்தியத்தின் ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் தீபக் தம்ஷெட்டிவார் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘ராமர் கோயிலுக்கு நன்கொடை திரட்டும் பிரசாரம் சமீபத்தில் முடிந்தது. ஆர்எஸ்எஸ்.சை சேர்ந்த 7,512 பெண்கள் உட்பட மொத்தம் 70,796 தன்னார்வலர்கள் இதில் ஈடுபட்டனர்.