கும்மிடிப்பூண்டியில் பிரசாரம் திறந்தவேனில் நின்றபடி கையசைத்த விஜயகாந்த்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலில் உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் போட்டியடவில்லை. நேற்று முதல் 5 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் அக்கட்சி அறிவித்தது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் கே.எம்.டில்லி, பொன்னேரி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் பொன். ராஜா ஆகிய இருவரை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் நேற்று மாலை விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டது.

கட்சி தொண்டர்கள் புடைசூழ வாகனத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டி பஜாரில் திறந்த வாகனத்தில் வந்தார். சிறிது நேரம் வாகனத்தில் இருந்து வெளியே வந்து தொண்டர்களை பார்த்து கையசைத்தபடியே விஜயகாந்த் வாகனம் வந்தது. பின்னர் வாகனத்தில் உள்ளே சென்று விஜயகாந்த் அமர்ந்து கொண்டார். உடல்நலக் குறைவால் வாகனத்தில் நின்றபடியே கையசைத்துவிட்டு எதுவும் பேசாமல் விஜயகாந்த் வாகனம் புறப்பட்டு சென்றது. நீண்ட நாட்களுக்கு விஜயகாந்த் பேச்சை கேட்பதற்காக ஆவலுடன் வந்திருந்த அக்கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: