சாத்தான்குளத்தில் பரபரப்பு பைக்கில் திடீர் தீயால் வியாபாரி படுகாயம்: காங். வேட்பாளர் மனித நேய சேவை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே கருங்கடல் கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல்(60) பனை தொழிலாளியான இவர் மொபட்டில் சென்று பனங்கிழங்கு  வியாபாரம் செய்து வருகிறார். நேற்றிரவு சுமார் 9 மணி அளவில் வியாபாரம் முடிந்து சாத்தான்குளத்தில் இருந்து கருங்கடல் நோக்கி மொபட்டில் சென்றார். சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை-செட்டிகுளம் விலக்கு இடையே காட்டு பகுதியில் சென்றபோது மொபட்டில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென பைக் தீப்பற்றி எரிந்ததுடன் சாமுவேலுக்கும் தீக்காயம் ஏற்பட்டு காயம் அடைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பைக்கை நிறுத்திவிட்டு சாலையோரம் தவித்து நின்றார். அப்போது சாத்தான்குளம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திருவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் கால்வாய் பஞ்சாயத்து தலைவர் சேதுராமன் மற்றும் நிர்வாகிகள் செட்டிகுளத்தில் பிரசாரம் செய்ய காரில் சென்றனர். சாலையில் பைக் தீவிபத்து ஏற்பட்டது அறிந்து வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் நிர்வாகிகள் காரில் இருந்து இறங்கி தீவிபத்தில் பாதித்த வியாபாரியை மீட்டனர். மேலும் அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 தகவல் அறிந்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் சென்று பைக்கில் ஏற்பட்ட தீயை அணைத்து  வியாபாரி  சாமுவேலை மீட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு சாமுவேலை உடனடியாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் மொபட் தீப்பற்றி ேசதமானதுமன்  மொபட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் தீயில் எரிந்து நாசமானது. சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர். தீவிபத்தை தொடர்ந்து வியாபாரி சாமுவேலை மருத்துவமனையில் உடனடி யாக சேர்க்க உதவிய காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் மனிதநேய சேவையை  அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Related Stories: