தஞ்சை தமிழ் பல்கலை. துணைவேந்தர் நியமனம் வழக்கு...தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ரத்து...ஐகோர்ட் கிளை தீர்ப்பு

மதுரை: தஞ்சை தமிழ் பல்கலை. துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனம் செல்லும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டதில் விதிமீறல் நடைபெற்றதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் துணை வேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்தை ரத்து செய்து ஆணையிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீடு செய்யப்பட்ட மனு இன்று  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் நியமனம் ரத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனம் செல்லும் எனவும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: